நுண்ணீர்ப் பாசனம் அல்லது சொட்டு நீர்ப் பாசனம் (Drip irrigation system) என்பது முதன்மை குழாய்கள் அமைத்து அதன் வாயிலாக பயிர்களுக்கு தேவையான நீரை, துளித்துளியாக மண்ணின் மேற்பரப்பில் அல்லது பயிர்களின் வேர்ப்பகுதியில் நேரடியாக வழங்கும் ஒரு மேம்பட்ட நீர்ப்பராமரிப்பு முறையாகும். என்னதான் நீராதாரம் குறைந்தாலும், விவசாயம் செய்யும் நிலப்பரப்பு குறைந்தாலும் வாழும் மக்களுக்கு உணவு அளிக்க விளைச்சல் திறனை அதிகரித்து தரமான உணவு விளைவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நீரை வீணாக்காமல் கிடைக்கும் நீரைக் கொண்டு வேளாண்மையில் நீடித்த நிலையான வருவாய் பெற வேண்டிய அவசியமான நிலையில் உழவர்கள் உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு துளி நீரையும் வீணாக்காது உணவு உற்பத்திக்குப் பயன்படுத்த உருவாக்கப்பட்ட திட்டமே "நுண்ணீர்ப் பாசனத் திட்டமாகும் அல்லது சொட்டு நீர்ப் பாசனத் திட்டம்" எனப்படுவது.
இந்த திட்டத்தின் மூலம் பெரும்பாலான விவசாயிகள் பயணடைந்துள்ளனர். தங்களிடம் இருக்கும் குறைந்த அளவு தண்ணீரை முதன்மை குழாய், துணைக் குழாய்கள், மற்றும் பக்கவாட்டுக் குழாய்கள் ஆகிய அமைப்புகள் வாயிலாக பயிர்களுக்கு தேவையான நீரை அளிக்க உதவுகிறது. இதில் விடும் தண்ணீரானது மெதுவாகவும் குறைந்த அழுத்தத்திலும் செடியின் வேர்ப் பகுதியில் நேரடியாக அளிக்கப்படுகிறது. பயிர் திடமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்வதோடு, வேகமாக முதிர்ச்சி அடையும். இதன் மூலம் விளைச்சலில் எந்தவிதமான பாதிப்புமின்றி உற்பத்தி அதிகரிக்கிறது.
சொட்டு நீர்ப் பாசனத்திற்கு உபயோகிக்கும் கருவிகள்:
* மேல் நிலைத் தொட்டி - தண்ணீர் தேக்கி வைக்க முக்கிய பகுதியில் இருக்க வேண்டும்.
* குழாய்கள் - 50, 75 மி.மீ. அளவில் இருக்க வேண்டும்.
* சொட்டு குழாய்கள் - 2, 4, 8 எல்.பி.ஹெச். போன்ற அழுத்தமுடைய குழாய்களாக இருக்கு வேண்டும்.
* தண்ணீர் வடிக்கும் சல்லடை - பெரிய மண் துகள்களை மற்றும் நுண்ணிய துகள்களை வடிக்க பயன்படுத்தப்படுகிறது.
* உரத்தொட்டி - கரைத்த உரங்கள் மற்றும் நீர்ம உரங்களை தேக்கி வைத்து குழாய்கள் மூலம் பயிர்களுக்கு அனுப்ப பயன்படுகின்றது.
* பின்நோக்கிய நீரோட்டத்தை கட்டுப்படுத்தும் கருவி - குழாய்களில் செலுத்தப்பட்ட நீர் பின்னோக்கி செல்லுவதைத் தடுத்து நிறுத்த பயன்படும்.
* அழுத்த மானி - செலுத்தப்படும் தண்ணீரின் அழுத்தத்தை மாற்றிக்கொள்ள உபயோகப்படுகிறது.
சொட்டு நீர்ப் பாசனத்தை இரண்டு விதமாக பயன்படுத்தலாம்:
1. வெளிப்புறமாக குழாய்களைப் பதித்து பாசனம் செய்வது.
2. நிலத்துக்குக் கீழ் உட்புறமாக குழாய்களைப் பதித்து பாசனம் செய்வது.
இதில் இரண்டாவதாக சொல்லப்பட்ட முறை 'கீழ்மட்ட சொட்டு நீர்ப்பாசனம்' (Sub surface Drip Irrigation, SDI) எனப்படும். இம்முறை மூலம், களை எடுக்கும் போதும், அறுவடை செய்யும் போதும் குழாய்களுக்கு எந்த சேதமும் இல்லாமல் பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது.
தண்ணீரை தேக்கி வைக்க சிரமம்:
தண்ணீரை தேக்கி வைக்க முடியாத இடங்களில் சொட்டு நீர்ப் பாசனம் அதிக அளவில் உபயோகப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சொட்டு நீர்ப் பாசனம் பேருதவியாக அமையும். மேலும் மலைச்சார்ந்த பகுதிகளில் தண்ணீர் வழிந்தோடுவது அதிகமாக இருப்பதனால், அதிக அளவிலான தண்ணீர் வீணாகிறது. அப்படியான இடங்களில் சொட்டு நீர்ப் பாசனத்தின் மூலம் நீர் குறைவாகவும், கூடிய ஆற்றலுடனும் பயன்படுத்தப்படுவதனால் நீர் வீணாவது குறைக்கப்படும்.
தண்ணீரின் தன்மை:
பயிருக்குச் செலுத்தப்படும் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகமாக உள்ளபோது, சொட்டு நீர்ப் பாசனம் மூலம் நீர் செலுத்தினால், தண்ணீரில் உப்பு தேங்கி பயிரை தாக்குவது குறைக்கப்படும்.
இருப்பினும் இதில் சில சிக்கல்கள் உள்ளன, அவை என்னவென்றால் :
~ ஆரம்பச்செலவு மிகவும் அதிகம்.
~ வெளியே சுபநிகழ்ச்சிகளுக்கு செல்லும் பட்சத்தில் முறையாக பாசனம் செய்வதில் சிரமம் ஏற்படும்.
~ நமக்கு தேவைப்படும் நேரத்தில் நீர்ப் பாய்ச்ச ஆட்கள் கிடைப்பதில்லை.
~ குழாய்கள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும்.
~ குறைந்த அளவே தண்ணீர் இருக்கும் பட்சத்தில் சமமாக தண்ணீர் அளிப்பதில் சிரமம்
~ அணில்,எலி போன்ற விலங்குகள் பாசனம் செய்யும் குழாய்களை கடித்து சேதப்படுத்துவதால் மிகுந்த விரயம்.
~ தண்ணீரில் உப்பு அளவு அதிகமாக இருக்கும் பொழுது குழாய்களில் அடைப்பு ஏற்படும்.
மக்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தாலும் அதில் சில சிரமங்கள் மற்றும் சிக்கல்கள் இருந்து தான் வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் "நயாகரா சொல்லியுசன்ஸ்(Niagara Solutions)" எனும் நிறுவனம்" விவசாயிகள் பயனடையும் வகையில் சொட்டு நீர்ப் பாசனத்திற்கு ஏற்றவாறு வித விதமான இயந்திர கருவிகளை வடிவமைத்துள்ளனர். அங்கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் எவ்வித சிரமமும் இன்றி உற்பத்தி செய்ய முடியும்.
"நயாகரா" நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளுக்கு தங்கள் கண்டுபிடிப்புகளை வழங்கி வருகின்றனர். மேலும் அந்நிறுவனத்தை அணுகுவதற்கு "https://www.niagarasolutions.in" என்ற இணயதளத்தை பயன்படுத்தலாம் அல்லது அந்நிறுவனத்தின் தொலைபேசி எண் "9842505100" இதன் மூலமாகவும் அணுகலாம்.
இவர்களின் கண்டுபிடிப்பு கருவி எவ்வாறு நீர் பாசனம் செய்ய பயன்படுகின்றது என்பதை பார்ப்போம் :
~ இவர்கள் கண்டுபிடிப்புகள் இக்காலத்திற்கு ஏற்றவாறு நவீன தொழில் நுற்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.
~ நயாகரா நிறுவனம் அக்கருவிகளுக்கென்றே உருவாக்கியுள்ள செயலி மூலம் நாம் அதனை இருக்கும் இடத்தில் இருந்து கட்டுப்படுத்தலாம்.
~ இதன் மூலம் அனைத்து மரத்திற்கும் சமமான அளவில் தண்ணீர் கிடைக்க உதவுகிறது.
~ இதற்கென்று தனியாக வேலைக்கு ஆட்கள் தேவையில்லை.
~ நாம் விரும்பும் நேரத்தில் பாசனம் செய்யலாம்
~ குறைந்த அளவே தண்ணீர் பயன்படுத்தப்படும்.
~ மொபைல் செயலி மூலம் ஒரு இடத்திற்கு செல்லும் தண்ணீரை மற்ற இடத்திற்கு மாற்றலாம்.
~ இந்த செயலி மூலம் எந்த இடத்தில் பாசனம் செய்ய வேண்டும், எவ்வளவு தண்ணீர் இருப்பு உள்ளது, நீரோட்டத்தின் அழுத்தம் என்ன, எப்பொழுதும் மோட்டாரை அனைக்க வேண்டும் என அனைத்தையும் நமக்கு ஏற்றவாறு அமைத்து கொள்ளலாம்.
~ குறைந்த செலவில் உற்பத்தியை அதிகரித்துக் கொள்ள முடியும்.
சொட்டு நீர்ப் பாசனம் அல்லது நுண்ணீர்ப் பாசனம் (Drip irrigation system) என்பது முதன்மை குழாய்கள் அமைத்து அதன் வாயிலாக பயிர்களுக்கு தேவையான நீரை, துளித்துளியாக மண்ணின் மேற்பரப்பில் அல்லது பயிர்களின் வேர்ப்பகுதியில் நேரடியாக வழங்கும் ஒரு மேம்பட்ட நீர்ப்பராமரிப்பு முறையாகும். என்னதான் நீராதாரம் குறைந்தாலும், விவசாயம் செய்யும் நிலப்பரப்பு குறைந்தாலும் வாழும் மக்களுக்கு உணவு அளிக்க விளைச்சல் திறனை அதிகரித்து தரமான உணவு விளைவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் பயிர் செய்யும் எந்தப் பயிருக்கும் தண்ணீர் பாய்ச்சுவது மிகவும் முக்கியமான பணி. இந்த தண்ணீர் பாசனம் பயிர்களுக்கு சென்று சேரும் முன் பல்வேறு நிலைகளில் விரயமாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு துளி நீரையும் வீணாக்காது உணவு உற்பத்திக்குப் பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் "நுண்ணீர்ப் பாசனத் திட்டமாகும் அல்லது சொட்டு நீர்ப் பாசனத் திட்டம்" எனப்படுவது.
சொட்டு நீர்ப் பாசனத்தை இரண்டு விதமாக பயன்படுத்தலாம் :
1. வெளிப்புறமாக குழாய்களைப் பதிப்பது
2. நிலத்துக்குக் கீழ் உட்புறமாக குழாய்களைப் பதிப்பது
இதில் இரண்டாவதாக சொல்லப்பட்ட முறை 'கீழ்மட்ட சொட்டு நீர்ப்பாசனம்' (Sub surface Drip Irrigation, SDI) எனப்படும். இம்முறை மூலம், களை எடுக்கும் போதும், அறுவடை செய்யும் போதும் குழாய்களுக்கு எந்த சேதமும் இல்லாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
அரசு மானியம் :
~ இந்த சொட்டு நீர்ப்பாசனம் அமைத்திட சிறு, குறு விவசாயிகள் இலவசமாகவும் மற்ற விவசாயிகள் 75% சதவீதம் மானியத்திலும் பாசனம் அமைக்கின்றனர்.
~ நஞ்சை நிலங்கள் இருந்தால் இரண்டரை ஏக்கரும், புஞ்சை நிலமாக இருந்தால் 5 ஏக்கரும் நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் 50% சதவீதம் மானியத்தையும், மாநில அரசு வழங்கும் 50% சதவீதம் மானியத்தையும் பெற்று இலவசமாக தங்கள் நிலத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.
~ இதர விவசாயிகளுக்கு மத்திய அரசு 50% சதவீதமும், மாநில அரசு 25% சதவீதமும் மானியம் வழங்கும். மொத்தம் 75% மானியம் பெற்று தங்கள் நிலத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.
அதிகபட்ச மானிய தொகை :
~ அதிகபட்ச மானியமாக ரூ. 43 ஆயிரம் சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைத்திட அரசு வழங்குகிறது. இது 100% சதவீதம் மானியத் தொகையின் அளவு.
~ இந்த தொகையை வைத்து சிறு, குறு விவசாயிகள் தங்கள் இடத்தில் பயிரிட்டுள்ள வைக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து கொள்ளலாம்.
~ உதாரணமாக பப்பாளி, மாதுளை, கொய்யா, எலுமிச்சைக்கு 3-4 ஏக்கரும், வெங்காயம் மற்றும் காய்கறிகளுக்கு 1 ஏக்கரும், வாழைக்கு 1 ஏக்கரும், மாம்பழம், சப்போட்டா, தென்னை மரங்களுக்கு 5 ஏக்கரும் நீர்ப்பாசனம் கருவி அமைக்கலாம்.
~ இதர விவசாயிகளுக்கு 75% சதவீதம் 12 ஏக்கர் அளவிற்கு அதிகபட்ச மானியமாக வழங்கப்படுகிறது. அந்த மானியத்தை பெற்றுக் கொண்டு தங்கள் நிலத்தில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நீர்ப்பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.
~ மேலும் துணை நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் முழு மானியத்தில் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு, குழாய் பதிக்கும் செலவில் கூடுதலாக, 3,000 ரூபாய் பெறலாம் எனத் தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
மானியம் பெறத் தேவையான ஆவணங்கள்:
~ மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க ஆவணங்களான குடும்ப அட்டை நகல், ஆதார் கார்டு நகல், கம்ப்யூட்டர் சிட்டா அடங்கல், நிலத்தின் வரைப்படம், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட்(Passport) அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுக வேண்டும்.
~ சிறு, குறு விவசாயியாக இருந்தால் அந்த சான்றினை இணைக்க வேண்டும்.
~ ஆவணங்களின் அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கும் நிறுவனங்களில் விவசாயி ஒரு நிறுவனத்தைச் தேர்வு செய்துகொள்ளலாம்.
~ சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனம் அமைக்கும் முன் விவசாயிகளின் நிலத்தை வேளாண்மை பொறியியல் துறை பொறியாளார்கள் களப்பணி மேற்கொண்டு பின்பு விலைப் புள்ளியினை டான்ஹோடா வலைதளத்தில் பதிவேற்றம் செய்வார்.
~ பின்பு அதன் அடிப்படையில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் உரிய நிறுவனத்துக்கு பணி ஆணை வழங்குவார்.
~ அதில் விவசாயிகள் மானியம் போக எஞ்சிய மதிப்பீட்டுத் தொகையைத் தேர்ந்தெடுத்த நிறுவனத்துக்கு வங்கி வரைவோலை எடுக்க வேண்டும்.
~ இந்த விண்ணப்பம் மாவட்ட சொட்டு நீர்ப்பாசனக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டும் பின்னர் அதனை ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பார்கள்.
~ பின் நீர்ப்பாசனம் அமைக்க ஆணை வழங்கப்படும்.
~ பிறகு விவசாயி தன் செலவில் குழாய்கள் பதிக்க வேண்டும். குழாய் பதிக்க வெட்டப்படும் குழியானது, இரண்டடி அகலம், இரண்டடி ஆழம் கொண்டதாக இருக்க வேண்டும்.
~ புதிதாகச் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க ஆர்வமுள்ள விவசாயிகள், குழி வெட்டும் செலவையும் சேர்த்து விண்ணப்பித்து, மானியம் பெறலாம்.
~ அதற்குப் பின் விவசாயிகள் நிலத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் அமைக்கப்படும்.
~ அதன் செயல்பாட்டை ஆய்வு செய்த பின் நிறுவனத்திற்கு விவசாய மானியம் வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி, நீர்ப்பாசன வசதியற்ற விவசாய நிலத்தில் நுண்ணீர்ப்பாசனம் அமைக்கத் தேவையான நீர் ஆதாரத்தை உருவாக்குவதற்காக ஆழ்துளைக் கிணறு அமைக்க ரூ.25,000, மின் மோட்டார் பம்ப் அல்லது டீசல் இன்ஜின் வாங்குவதற்கு ரூ.15,000, கிணற்றிலிருந்து நீரை நுண்ணீர்ப்பாசனம் மூலம் வயலுக்கு எடுத்துச் செல்ல தேவையான பி.வி.சி நீர் கடத்துக் குழாய்கள் வாங்குவதற்கு ரூ.10,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே இந்த மானியம் வழங்கப்படுகிறது.
சொட்டு நீர்ப்பாசனத்தின் பயன் :
~ தண்ணீர் வீணாக்கப்படுவது குறைவு.
~ எப்படிப்பட்ட வடிவத்தில் உள்ள நிலங்களிலும் பாசனம் செய்யலாம்.
~ மிகக் குறைந்த மின்சார அளவே போதுமானது.
~ சொட்டு நீர் பாசன அமைப்பின் மூலம் நீரில் கரையக்கூடிய உரங்களை துல்லியமாக இட்டு உரமேலாண்மையை மேற்கொள்ள இயலும்.
~ வேர்ப்பகுதியில் ஈரப்பதம் நிலை நிறுத்தப்படுகிறது.
~ நிலங்களை சமன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
விவசாயத்தில் ஈடுபாடு கொண்டு விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் "நயாகரா சொல்லியுசன்ஸ்(Niagara Solutions) எனும் நிறுவனம் விவசாயிகள் பயனடையும் வகையில் சொட்டு நீர்ப்பாசனத்திற்கு ஏற்றவாறு வித விதமான இயந்திர கருவிகளை வடிவமைத்துள்ளனர். அங்கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் எவ்வித சிரமமும் இன்றி உற்பத்தி செய்ய முடியும்.
"நயாகரா" நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளுக்கு தங்கள் கண்டுபிடிப்புகளை வழங்கி வருகின்றனர். மேலும் அந்நிறுவனத்தை அணுகுவதற்கு "https://www.niagarasolutions.in" என்ற இணயதளத்தை பயன்படுத்தலாம் அல்லது அந்நிறுவனத்தின் தொலைபேசி எண் "9842505100" இதன் மூலமாகவும் அணுகலாம்.
இவர்களின் கண்டுபிடிப்பு கருவி எவ்வாறு நீர்பாசனம் செய்ய பயன்படுகின்றது என்பதை பார்ப்போம்:
~ இவர்கள் கண்டுபிடிப்புகள் இக்காலத்திற்கு ஏற்றவாறு நவீன தொழில் நுற்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.
~ நயாகரா நிறுவனம் அக்கருவிகளுக்கென்றே உருவாக்கியுள்ள செயலி மூலம் நாம் அதனை இருக்கும் இடத்தில் இருந்து கட்டுப்படுத்தலாம்.
~ இதன் மூலம் அனைத்து மரத்திற்கும் சமமான அளவில் தண்ணீர் கிடைக்க உதவுகிறது.
~ இதற்கென்று தனியாக வேலைக்கு ஆட்கள் தேவையில்லை.
~ நாம் விரும்பும் நேரத்தில் பாசனம் செய்யலாம்
~ குறைந்த அளவே தண்ணீர் பயன்படுத்தப்படும்.
~ மொபைல் செயலி மூலம் ஒரு இடத்திற்கு செல்லும் தண்ணீரை மற்ற இடத்திற்கு மாற்றலாம்.
~ இந்த செயலி மூலம் எந்த இடத்தில் பாசனம் செய்ய வேண்டும், எவ்வளவு தண்ணீர் இருப்பு உள்ளது, நீரோட்டத்தின் அழுத்தம் என்ன, எப்பொழுதும் மோட்டாரை அனைக்க வேண்டும் என அனைத்தையும் நமக்கு ஏற்றவாறு அமைத்து கொள்ளலாம்.
~ குறைந்த செலவில் உற்பத்தியை அதிகரித்துக் கொள்ள முடியும்.